சானியா மிர்ஸாவுடன் ஷாகித் கபூர் காதல்?
ஷாகித் கபூரும், கரீனா கபூரும் படு தீவிரமாக ஒரு காலத்தில் காதலித்து வந்தனர். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட செய்திகள் வந்தன. ஆனால் இந்த ஜோடி திடீரென பிரிந்தது. அதன் பின்னர் சைப் அலிகானுடன் காதலில் வீழ்ந்தார் கரீனா.
தனிமையில் விடப்பட்ட ஷாகித் கபூருக்கும், சானியா மிர்ஸாவுக்கும் இடையே தற்போது காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் மும்பை, கோவா என சுற்றி வருவதாகவும், இரவு பார்ட்டிகளில் ஜோடியாக கலந்து கொள்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷாகித் கபூர், கரீனா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஜப் வி மெட் படத்தைப் பார்த்துதான் சானியாவுக்கு, ஷாகித் மீது காதல் பிறந்ததாம்.
இதெல்லாம் நிஜமா என்று ஷாகித்திடம் கேட்டால், இது போன்ற வதந்திகளை நான் எப்போதுமே சீரியசாக எடுத்துக் கொள்வது கிடையாது. சானியாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
ஜப் வி மெட் படத்தை பார்த்து என்னைப் பாராட்டினார். வேறு ஒன்றும் இல்லை என்றார். பார்ட்டிகளில் கலந்து கொண்டீர்களே.அதற்கு என்ன அர்த்தம் என்றால், ஹோட்டல்களில் இரண்டு பேரும் சேர்ந்து லன்ச் சாப்பிட்டோம், டின்னர் சாப்பிட்டோம். சாப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது.
சானியாவை எங்கு பார்த்தேன், எப்படி பார்த்தேன், எத்தனை தடவை பார்த்ேதன் என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது. எனது பர்சனல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே என்றார் ஷாகித்.
இந்த நிலையில், வித்யா பாலனுடன், ஷாகித் இணைந்து நடித்த கிஸ்மத் கனெக்ஷன் படத்தைப் பார்த்த சானியா, ஷாகித்தின் நடிப்பு சூப்பர் என பாராட்டுத் தெரிவித்துள்ளாராம். அதையும் தனது வாயாலேயே ஷாகித் கூறியுள்ளார். வித்யா பாலனையும் 'கேர்ள், நெக்ஸ்ட் டோர்' என பாராட்டினாராம் சானியா.
காதல் இருக்கிறதோ, இல்லையோ, நடிப்பிலும், விளையாட்டிலும் இருவரும் ஜொலித்தால் சரிதான்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications