ராமதாஸுடன் தங்கபாலு திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட தங்கபாலு, முதலில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் இன்று சென்னையில் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை.
இருவரும் அரசியல் பேசவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக பாமக வாக்களிக்கும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதற்கு நன்றி கூறவே இன்று அவரை சந்தித்தேன் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications