அரசுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு உறுதியானது
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தங்களது ஆதரவை சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
சிறு கட்சிகளின் ஆதரவை திரட்டி வரும் காங்கிரஸ் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் உத்தரவாதம் கொடுத்து ஆதரவை உறுதி செய்து வருகிறது.
சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஐந்து எம்.பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்ட காங்கிரஸிடம் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என சிபுசோரன் நிபந்தனை விதித்தார். இதுதவிர இணை அமைச்சர் பதவி ஒன்றும் தேவை எனவும் அவர் நிபந்தனை விதித்தார்.
ஆனால் சோரனுக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரலாம் என காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் இழுபறி நிலவி வந்தது. இதனால் சிபு சோரன்தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சிபுசோரன் கட்சி தற்போது தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் கொறடா, தனது கட்சி எம்.பிக்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கட்சி எம்.பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு அரசுக்கு உறுதியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு குறித்து அதன்கொறடா கூறுகையில், மதவாத சக்திகளை ஒருபோதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்காது என்றார்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications