ஓபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் ஜோசப்
Subscribe to Oneindia Tamil
{image-Joseph Biden-obama250_23082008.jpg tamil.oneindia.com}வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள பாரக் ஓபாமா, தனது துணை அதிபர் வேட்பாளராக ஜோசப் பிடனை தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் பாரக் ஓபாமா போட்டியிடவுள்ளார். துணை அதிபராக ஜனநாயகக் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்றஎதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஓபாமாவிடம் வேட்பாளர் போட்டியில் தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன் நிற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோசப் பிடனை தனது துணை அதிபர் வேட்பாளராக ஓபாமா தேர்வு செய்துள்ளார்.
பிடன் ஏற்கனவே இருமுறை அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் பங்கேற்றவர். தற்போது அமெரிக்க செனட் வெளியுறவு விவகாரக் கமிட்டியின் தலைவராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications