தாக்குதல்: இந்தியன் முஜாஹீதின் இ-மெயிலில் மிரட்டல்
டெல்லி: குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தாக்குதல் நடத்தப்போவதாக இந்தியன் முஜாஹீதின் என்ற தீவிரவாத அமைப்பு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது.
பிரபல தனியார் டிவி நிறுவனங்கள் சிலவற்றுக்கு இந்தியன் முஜாஹீதின் தீவிரவாத அமைப்பு இன்று இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தாக்குதல் நடத்தப்போவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று இந்த தீவிரவாத அமைப்பு இ-மெயில் அனுப்பியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை போலீஸார் பிடித்து விசாரித்த வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இ-மெயிலில், அகமதாபாத்தில நடந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் சிமி இயக்கத்துக்கும், தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
அகமதாபாத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியன் முஜாஹூதின் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications