பொருளாதார சரிவால் பலனடையும் இணைய தளங்கள்!
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை பலரது இதயத் துடிப்பை பதம் பார்த்துக் கொண்டிருக்க, வர்த்தகம் தொடர்பான இணைய தளங்களை நடத்துவோர் மட்டும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.
ஆன்லைன் வர்த்தகம், பங்கு வியாபாரம் தொடர்பான இணைய தளங்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து, கடந்த வாரத்தில் மட்டும் வரலாறு காணாத பேஜ் வியூஸ் கிடைத்துள்ளதாம்.
லேஹ்மன் பிரதர்ஸ் திவால், மெரில் லின்ஜ் பின்னடைவு, ஏஐஜிக்கு வந்த சறுக்கல் போன்ற திடீர் பின்னடைவால், தங்கள் பங்குகளை விற்பது, அல்லது எந்தெந்த நிறுவனங்கள் மூழ்கப் போகின்றன என்பதை அறிந்து கொள்லும் ஆர்வம் காரணமாக ஒவ்வொருவரும் ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களே கதியென்று கிடக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஸ்காட்ரேட் என்ற தளம்தான் மிக மிக அதிக அளவு பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த வியாழனன்று இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தளத்தின் ஹிட்ஸ் எகிறியதாம்.
இன்னும் சில ஆன்லைன் வர்த்தக தளங்களின் நிலையோ தலைகீழ். இதுவரை வந்த பார்வையாளர்களும் அவர்களுக்கு வராமல் போய், 12 மடங்கு குறைவான பார்வையாளர்களுடன் தடுமாறத் தொடங்கியுள்ளன அவை. இவை பெரும்பாலும் இ-டிரேட் எனப்படும் ஆன்லைன் வியாரத்தில் ஈடுபட்டுள்ளவை.
என்றாலும் கடந்த பல மாத நிலைமையோடு ஒப்பிடுகையில், இந்த வாரம் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வர்த்தக இணைய தளங்களுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதே உண்மை.
ஓரிரு தளங்கள் பாதிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பான ஹிட்ஸ் கிடைத்துள்ளது, என்கிறது ஹிட்வைஸ் எனும் இணைய தளங்களை ரேட்டிங் செய்யும் நிறுவனம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications