20 குண்டுகள் வைத்து நேரு பிளேஸை தகர்க்க சதி: போலீஸ்

Subscribe to Oneindia Tamil

Nehru Place - Delhi
டெல்லி: டெல்லியின் முக்கியப் பகுதியும், மக்கள் நெரிசல் மிக்கதுமான நேரு பிளேஸ் பகுதியை 20 வெடிகுண்டுகள் வைத்து பெரும் நாசத்தை விளைவிக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

டெல்லி போலீஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் ஷகீல், ஜியா உர் ரஹ்மான், ஷகீர் நிஸார் ஆகியோர் இந்த பரபரப்பு தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 13ம் தேதி டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று காலை ஜியா, ஷகீல், ஷகீர் ஆகிய 3 தீவிரவாதிகளையும் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 குண்டுகளை வைத்து தகர்க்க சதி:

இதுகுறித்து டெல்லி தெற்கு துணை ஆணையர் தாலிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேரு பிளேஸ் பகுதியில் பெரும் நாசத்ைத ஏற்படுத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். அங்கு மட்டும் 20 குண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஜாமியா நகர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அதீப்தான் இதற்கான திட்டத்ைத தீட்டியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதீப்தான், ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டவர் ஆவார்.

நேரு பிளேஸ் பகுதியில் 20 குண்டுகளை வைக்க வேண்டும் என்று ஷகீலிடம் அதீப் தெரிவித்துள்ளார். அதற்கான திட்டத்தையும் விவரித்துள்ளார்.

டெல்லி தவிர மேலும் பல நகரங்களையும் குண்டுவெடிப்புகளால் சீர்குலைக்கப் போவதாகவும் ஷகீலிடம் அதீப் கூறியுள்ளார்.

13 தீவிரவாதிகள்:

மொத்தம் 13 பேர் சேர்ந்து குழுவாக இயங்கி உ.பி., அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.

டெல்லி குண்டுவெடிப்பில் தங்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக ஷகீலும், ஜியாவும் ஒப்புக் கொண்டுள்ளனர். அகமதாபாத் சம்பவத்திலும் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அகமதாபாத்தின் மணி நகர் பகுதியில் சைக்கிளில் தான்தான் குண்டு வைத்ததாக ஜியா ஒத்துக் கொண்டுள்ளார். அதேபோல டெல்லியில், கப்பார் மார்க்கெட்டில் தான் குண்டுகளை வைத்ததாக ஷகீல் ஒத்துக் கொண்டுள்ளார்.

முதலில் கப்பார் மார்க்கெட்டில் 2 குணடுகளை ஷகீல் வைத்துள்ளார். ஆனால் அதில் ஒரு குண்டு திடீரென செயலிழந்து விட்டதால் அந்தக் குண்டை எடுத்து பையில் போட்டுக் கொண்டு ஒரு ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டனர். பின்னர் அந்த ஆட்டோவை ஒரு இடத்தில் விட்டு விட்டு போய் விட்டனர்.

அத்தனைக்கும் அதீபே காரணம்:

கொல்லப்பட்ட அதீபுக்கு, வாரணாசி, லக்னோ, ஜெய்ப்பூர், பைசாபாத் ஆகிய குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நேரடித் தொடர்பு இருப்பதாக இதுவரை கைது செய்யப்பட்ட அனைவருமே கூறியுள்ளனர். சூரத்திலும் அதீபே குண்டுகள் வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதீப் தனது திட்டங்களை முழுமையாக யாரிடமும் சொல்லி வைக்காததால், அவரது முழு நடவடிக்ைககள் குறித்து இவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை.

பி.ஏ. - எம்.ஏ. - எம்.பி.ஏ!

இன்று கைதான மூன்று பேருமே ஜாமியாவில் படித்துள்ளனர். ஜியா உர் ரஹ்மான் பி.ஏ. (ஹானர்ஸ்) படித்துள்ளார். ஷகீல் எம்.ஏ பொருளாதாரம் படித்து வருகிறார். ஷகீர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி ஆவார்.

ஜாமியா நகரில் அதீப் உள்ளிட்ட தீவிரவாதிகள் தங்கியிருந்த பத்லா வீட்டின் மேற்பார்வையாளரான அப்துல் ரஹ்மானின் மகன்தான் இந்த ஜியா. ஷகீல் உள்ளிட்டவர்களை வீட்டில் தங்க வைக்கலாம் என தனது தந்தையிடம் ஜியாதான் பரிந்துரைத்துள்ளார்.

அப்துல் ரஹ்மானும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார் தாலிவால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+