இலங்கை தாக்குதல்-மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து வரும் 10ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறியதாவது:
கச்சத்தீவு பகுதி அருகி்ல் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
இந்த தாக்குதல்களை உடனே தடுத்து நிறுத்த கோரி மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுகிறது.
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்தும், கச்சத்தீவை மீட்கக் கோரியும் வரும் 10ம் தேதி மீனவர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications