கோயில் திருவிழாவில் மோதல் - 6 பேர் காயம்
தென்காசி: தென்காசி அருகே கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசியை அடுத்த இலஞ்சி மிஷன் தெருவில் உள்ள வடகுத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதல் மரியாதை பெற்றுக் கொள்வது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
திருவிழா முடிந்த பிறகு ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் கையில் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் மற்றோரு கோஷ்டியை சேர்ந்தவர்களை தாக்கியதில் செல்வகுமார், சுகுமார், இசக்கி, செல்வம், மற்றொரு இசக்கி, ராமசாமி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
பலத்தக் காயமடைந்த செல்வகுமார் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சுகுமார் கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் போலீஸார் வழக்குபதிவு செய்து கீழ இலஞ்சியை சேர்ந்த ரஞ்சித்குமார், இ.குமார், காந்தி என்ற முத்துகுமார், பாண்டி, ரவி, செல்லதுரை, சொர்ணம், கோபால் உள்பட 15 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் இலஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications