For Daily Alerts
Just In
கிர்கிஸ்தானில் பயங்கர பூகம்பம் - 58 பேர் பலி - பலர் காயம்

மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தானின் அலாய்ஸ்கி மாவட்டத்தில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3ஆக பதிவாகியுள்ளது.
பூகம்பத்தில் சிக்கி 120 கட்டடங்கள் இடிந்து நாசமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 58 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கிர்கிஸ்தானின் அவசர கால அமைச்சகத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துஸ்சமத் பயஸோவ் தெரிவித்தார்.
இந்த பூகம்பத்தின் மையம், அண்டை நாடான தாஜிகிஸ்தானில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.