'பிளாக்' மூலம் மக்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ஸ்டாலின்!

6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஸ்டாலின் தனது பெயரில் இணையதளம் மற்றும் பிளாக்கைத் (http://mkstalin.net/blog/) தொடங்கினார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்டாலின் தொடர்பான செய்திகள், படங்கள், அவரது அறிக்கைகள், கருத்துக்கள் உள்ளிட்டவை அதில் இடம் பெற்று வருகின்றன.
இதுதவிர பார்வையாளர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.
பிளாக் மூலம் ஸ்டாலின் தனது கருத்துக்களை கட்டுரையாக பதிவு செய்கிறார். உரையாடுகிறார். இந்த நிலையில், பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறி பதிவு செய்து வருகின்றனர்.
அவர்களின் கேள்விகளுக்கு பணி நெருக்கடிக்கு நடுவில் பதிலளித்து வருகிறார் ஸ்டாலின். இந்த புதிய பகுதிக்கு கேள்விகளை பதிவு செய்யலாம்.
அரசியல், அரசு திட்டங்கள், இளைஞர் முன்னேற்றம், கட்சி வளர்ச்சி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த மக்களின் கேள்விகளுக்கு பிளாக் மூலம் அவர் விரைவில் பதிலளிக்க உள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த பணிகளை அனைத்து தரப்பினருக்கும் விளக்குவதற்கான ஒரு களமாக கேள்வி-பதில் பகுதிகளை ஸ்டாலின் கருதுகிறார். இந்த பகுதி இன்று முதல் தொடங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications