ஈரோடு மாவட்டத்தில் 2 சர்ச்கள் மீது கல் வீசி தாக்குதல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே இரண்டு தேவாலயங்கள் மீது கற்களை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தம்பாடி மற்றும் பெருந்தலையூர் ஆகிய இடங்களில் 2 தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தம்பாடியில் உள்ள ஏசு அற்புதம் செய்கிறார் பிரார்த்தனைக் கூடத்திற்கு நள்ளிரவில் வந்த ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியது. இதில் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.
பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதாக தேவாலய காவலாளி தெரிவித்தார்.
அதற்கு அடுத்த அரை மணி நேரத்தில், பெருந்தலையூரில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் பைபிள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சேதமடைந்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. அவினாஷ்குமார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். இரு சர்ச்சுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.