For Daily Alerts
Just In
தடுப்பூசி போடப்பட்ட குழந்தை பரிதாப சாவு
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சோழசிராமணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி அமுதா. இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளன.
இதில் பெண் குழந்தையான ரசிகாவுக்கு ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தையின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் குழந்தை ரசிகா நேற்று காலை இறந்தாள்.
பிரேதப் பரிசோதனைக்கு உடலை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.