தீவிரவாதத்தை எதிர்கக மத்திய அரசுக்கு துணிவில்லை: மோடி
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய எதிரியாக தீவிரவாதம் உள்ளது. ஆனால் அதை எதிர்க்க மத்திய அரசுக்கு துணிவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். மேலும்காங்கிரஸ் தலைமையிலான மததிய அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
தீவிரவாதத்தால் நாடு மோசமான விளைவுகளை சந்தித்துள்ளது. இது தீவிரவாத பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதையே காட்டுகிறது. தீவிரவாதம் குறித்து மத்திய அரசு விவாதிக்க தயாராக இல்லை.
இந்த அரசு ஓட்டு வங்கி அரசியலுக்கு தீவிரவாதம் குறித்து பேசுவதை தவிர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய எதிரியாக தீவிரவாதம் உள்ளது. ஆனால் அதை எதிர்க்க மத்திய அரசுக்கு துணிவில்லை.
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தையும் மத்திய அரசு மெத்தனமாக நடத்துகிறது. கடந்த 10ம் தேதி வரை கவுன்சில் கூட்டம் குறித்து நிகழ்ச்சி குறிப்புகளை அனுப்பவில்லை. கூட்டத்துக்கு முன்னர்தான் நிகழ்ச்சிக் குறிப்பு வந்தது. ஆனால் அதில் தீவிரவாதம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
தீவிரவாதத்தால் நாடு மோசமாக பாதிக்கப்பட்டும் கூட அதுகுறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. தீவிரவாதம் குறித்த விவாதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் பிரிவினைவாதம் பற்றி அரசு பேசுகிறது.
பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் உள்ள வித்தியாசம் கூட அரசுக்கு தெரியவில்லை. இது மிகவும் மெத்தனமான செயல். அரசு தீவிரவாதம் குறித்து விவாதித்து முடிவுக்கு வர வேண்டும் என்றார்.
பின்னர் கூட்டத்தில் பேசுகையில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை. அது அவர்களை தண்டிப்பதற்காக மட்டுமல்லாமல், படித்த இளைஞர்கள் தீவிரவாதத்தை பின்பற்றுவதில் இருந்த தடுக்கவும் வேண்டும்.
தீவிரவாத தாக்குதல் நடத்துவோரை ஒடுக்கும் குஜராத் மாநில அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.
தீவிரவாத தாக்குல் நடத்துவோருக்கு ஆதரவாக மனித உரிமைகள் என்ற பெயரில் சிலர் செயல்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.
தாக்குதல் நடத்துவோருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மதம், இனம், மனித உரிமைகள் என்ற பெயரில் பலர் செயல்படுகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு நிதிக்கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இதனால் மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையிலும் நிதி முரண்பாடுகள்தான் அதிகரித்துள்ளன. இந்த பொருளாதார முரண்பாடுகளை போக்குவதற்கு மத்திய அரசு என்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.