வீடுகளின் மீது செல்போன் டவர்கள்-எதிர்த்து வழக்கு
சென்னை: குடியிருப்புகளின் மேல் மாடிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து சென்னையைச் ேசர்ந்த மக்கள் சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், செல்போன் டவர்கள் அமைப்பதற்கு உரிய விதிமுறைகள், நெறிமுறைகள் இல்லாததால் குடியிருப்புகளின் மேல் மாடிகளில் சரமாரியாக செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை முறைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ எந்தவித வசதியும் தற்போது இல்லை.
இப்படி அதிக அளவில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் கட்டடங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளிலும் இதுபோல செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களால் மக்களுக்கு சுகாதார பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே செல்போன் கோபுரங்களை நிர்மானிப்பதற்கு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். காலியிடங்களில் மட்டுமே இதுபோன்ற செல்போன் கோபுரங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். குடியிருப்புகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களை நீக்க உத்தரவிட வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படியே செல்போன் கோபுரங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications