ராஜிவ் சிலை உடைப்பு: தமிழகத்தில் புலிகள் நடமாட்டம்-தங்கபாலு

அக் கட்சியின மாநிலத் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கண்டனம்:
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்தத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் கடுமையாக, உள்ளார்ந்த உணர்வோடு உழைத்தாரோ அம்மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை அதே தமிழின துரோகிகள் படுகொலை செய்தனர்.
உலக வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத அச்சோக அத்தியாயத்தை உருவாக்கிய அந்த தமிழின துரோகிகளின் அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் அந்த தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழின துரோகிகள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களும், நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தே வருகின்றனர்.
இந்நிலையில் கொடுங்கையூரில் தியாகத் தலைவர் ராஜீவ் காந்தியின் உருவச் சிலையை இன்று காலையில் தமிழினத் துரோகிகள் உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது.
இக்கொடிய சம்பவம் அன்றைக்கு தலைவர் ராஜீவ்காந்தியின் உயிரைப் போக்கிய கொலைகாரக் கூட்டம் இன்னும் தமிழகத்தில் துணிச்சலாக நடமாடிக் கொண்டிருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ்காந்தி ஆகிய தலைவர்களையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய தமிழின துரோகிகளின் செயல்பாட்டுக்கு தமிழக மற்றும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
இந்நிலையில் தலைவர் ராஜீவ்காந்தி உருவச் சிலையை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும், மேலும் உரிய தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதியைக் கேட்டுகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications