சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 60 சிறப்பு பஸ்கள்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கும் பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வசதியாக தினமும் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை மாநகருக்கு ரயில்கள் மூலம் வருகை புரியும் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் போதிய பேருந்து வசதியின்மையால் மற்ற வாகனங்களில் அதிகமான கட்டணம் செலுத்தி பயணம் செய்கிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விடியற்காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நகரின் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சென்ட்ரல் ரயில் நிலைத்தில் இருந்து கே.கே.நகர், சாலி கிராமம், நந்தம்பாக்கம், மாங்காடு, தரமணி, கீழ்க்கட்டளை, கோவளம், மடிப்பாக்கம், மேற்கு முகப்பேர், கிழக்கு தாம்பரம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், ஐயப்பன்தாங்கல், வடபழனி, கிண்டி, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, பூந்தமல்லி, மந்தைவெளி, பெரியார் நகர், கொரட்டூர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, அண்ணா நகர் மேற்கு, வில்லிவாக்கம், செங்குன்றம், மணலி, அம்பத்தூர் ஆகிய 33 இடங்களுக்கு 60 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலை 6.30 மணிக்கு மேல் வரும் பயணிகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications