பெட்ரோல்- தண்ணீரை விட விலை கம்மி!

நாம் ஒரு லிட்டர் மினரல் வாட்டருக்குக் கொடுக்கும் விலையை விட குறைவான விலைக்குத் தான் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தப் புள்ளி விவரத்தைத் தந்துள்ளதும் கூட யாரோ ஒருவர் அல்ல... மத்திய பெட்ரோலியத்துறைதான்.
சர்வதேச சந்தையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய்யின் விலையை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் நீங்கலாக நிறுவனங்கள் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை என்ன தெரியுமா? 13 ரூபாய்தான். ஒரு லிட்டர் டீசலின் விலை 11 ரூபாய்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய்: 36 அல்லது 37 டாலர்கள் (இந்த மாத தொகுப்பு / இன்றைய மாறும் விலையில்). ஒரு பேரலில் 190 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும் (1 பேரல் என்பது 42 கேலன்கள். 1 கேலன் 4.5 லிட்டர்). ஒரு டாலரின் மதிப்பு 48 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட, கச்சா எண்ணெய் ஒரு லிட்டரின் விலை 9 ரூபாய் தான் வருகிறது!
இதில் சுத்திகரிப்புச் செலவு லிட்டருக்கு ரூ.2 முதல் 3 வரை சேரும் என்றாலும், பெட்ரோலிய உப பொருட்கள், நாப்தா, கெரோஸின், தார், மெழுகு, லூப்ரிகண்ட் ஆயில்கள்.... இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல்தான் இதுவரை உள்ளூரில் பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் நடக்கிறது. கெரோஸின் விலை இன்று டீஸலுக்கு சமம் என்பதை நினைவில் கொள்க.
ஒரு பேரல் கச்சா எண்ணெயில் 30 லிட்டர் பெட்ரோல், 85 லிட்டர் டீஸல் வரை எடுக்கிறார்கள். இந்தக் கணக்கு வைத்துப் பார்த்தாலும் வரிகள் நீங்கலாக 1 லிட்டர் டீஸலுக்கு ரூ.11-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-ம்தான் அடக்க விலையாகிறது. இதைத் தவிர உபரியாகக் கிடைக்கும் பொருட்களில் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபம். பிரித்தெடுக்கும் செலவு மட்டும்தான் கெரோசினுக்கெல்லாம்.
இந்தப் பெட்ரோலைத்தான் நாம் லிட்டருக்கு ரூ.50-ம் டீஸல் ரூ.33க்கும் வாங்குகிறோம்.
அரசு மனது வைத்தால் இப்போதுள்ள விலையில் பாதிக்கு பெட்ரோல் விற்கலாம். ரூ.20-க்கு டீஸல் விற்கலாம். அதுவே லாபம்தான். மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பார்த்துக் கொள்ளலாம்.
செய்வார்களா?
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications