For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஒளிமயமான எதி்ர்காலம் வர திருங்கலம் உதவட்டும்: ஜெ.

By Sridhar L
Google Oneindia Tamil News

திருமங்கலம்: தமிழகத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை கொண்டு வர திருமங்கலம் தேர்தல் திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஜெயலலிதா நேற்று 3வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.

கூத்தியார்குண்டில் தொடங்கி சிவரக் கோட்டை, கள்ளிக்குடி உள்பட பல்வேறு கிராமங் களில் அவர் பிரச்சாரம் செய்தார்.

கூத்தியார்குண்டில் அவர் பேசுகையில், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் சாட்சிகளை கலைத்து மு.க. அழகிரி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனை கொன்றது யார்? அவரைக் கொன்ற குற்றவாளிகள் யார்? அல்லது அவர் தன்னைத்தானே வெட்டிக் கொண்டு இறந்துவிட்டாரா?

மதுரையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை ஆயுதக் காடாக மாற்றி விட்டார்கள்.

சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. மின்வெட்டு காரணமாக தொழில்கள் நசிந்து விட்டன. ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஜன.9ஆம் தேதியன்று வாக்காளர்கள் யாருடைய மிரட்டலுக்கும் பயப்படாமல், அச்சமின்றி வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கவேண்டும். அங்கு வைக்கப்பட்டுள்ள கேமி ராக்கள் யாருக்கு வாக்களித் தோம் என்பதை காண்பித்து விடும் என வாக்காளர்களை மிரட்டப் பார்க்கின்றனர்.

வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள கேமிரா வாக்குச்சாவடிக்குள் ஏதாவது அசம்பாவித சம்பவங் கள் ஏற்பட்டால் அதை படமெடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது ரகசியமாக இருக்கும். எனவே வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை கொண்டு வர இந்தத் தேர்தல் திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!

முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக மேலூர் ஆர்.சாமியையும், கூட்டணி கட்சித்தலைவர்களையும் மதுரை மத்திய சிறைக்கு சென்று ஜெயலலிதா சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டு வந்த ஆர்.சாமி உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். புகார் கொடுக்க சென்ற அவர்கள் மீதே வழக்குத் தொடுத்து சிறையில் தள்ளியுள்ளனர்.

இதுகுறித்து தேர் தல் ஆணையத்தில் அளிக் கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் எஸ்.பி மனோகர் உள்ளிட்டவர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை அவர்களை மாற்றினால் போதாது.

காவல்துறைக்கு என்று சில கடமைகள் உள்ளது. அதற்கு கட்டுப்பட்டு அவர் கள் நடக்க வேண்டும். காவல்துறையினர் சட்டத் தின் காவலர்களாக செயல் பட வேண்டும்.அவர்கள் வன்முறையாளர்களாக, குண்டர்களாக நடப்பதை ஏற்க முடியாது.

எந்த போலீஸ் அதிகாரிகள் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களை போலீஸ் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யும் வரை ஓய மாட்டேன் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X