பிரபாகரனைப் பிடிக்க அதிரடிப்படை!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசிப் பகுதியான முல்லைத் தீவைப் பிடிக்க ராணுவம் மும்முரமாக உள்ளது. விரைவில் முல்லைத் தீவைப் பிடித்து விடுவோம் என ராணுவம் கூறி வருகிறது.
பிரபாகரன் முல்லைத் தீவில்தான் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ராணுவ தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில் கூறியிருந்தார்.
இந் நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க தனி அதிரடிப்படையை ராணுவம் அமைத்துள்ளது. பிரபாகரன் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் வந்தவுடன் விரைந்து செல்லும் வகையில் இந்தப் படை வைக்கப்பட்டுள்ளதாம். தனி விமானமும் தயாராக உள்ளதாம்.
இந்த அதிரடிப்படை வீரர்கள், பிரபாகரன் பதுங்கியிருக்கும் இடம் உள்ள பகுதியில் பாராசூட் மூலம் குதித்து அவரைப் பிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் நடமாட்டத்தையும் சிறப்பு அதிரடிப்படை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கடல் மார்க்கமாகவே விடுதலைப் புலிகள் தப்பிச் செல்ல முடியும் என்பதால் முல்லைத்தீவு கடல் பகுதி முழுவதையும், கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆனால் ராணுவத்தால் பிரபாகரனை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், பிரபாகரனைப் பாதுகாக்க பல முக்கிய பயிற்சிகளைப் பெற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களைத் தாண்டித்தான் பிரபாகரனை நெருங்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமேடு ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அதி நவீன, பங்கரில் பிரபாகரன் பதுங்கியிருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது.
மேலும், அவர் ஒரே பங்கரில் இருப்பதில்லை என்றும் புலிகள் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள பல்வேறு ரகசிய பங்கர்களில் அவர் மாறி மாறி பதுங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications