விமான நிலையங்களில் பழனி பஞ்சாமிர்தம்!

திருப்பதி லட்டுக்கு சமமாக பக்தர்கள் மத்தியில் புகழ் பெற்றது பழனி பஞ்சாமிர்தம். மற்ற இடங்களில் கிடைக்கும் பஞ்சாமிர்தங்களை விட இதன் சுவையே தனி.
அதிகரித்து வரும் தேவையை ஈடுகட்ட 2008ம் ஆண்டு முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ. 30க்கு விற்கப்படுகிறது.
விரைவில் விமான நிலையங்களிலும் பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய பழனி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், பஞ்சாமிர்தம் விற்பனை கடந்த 6 மாதத்தில் 17 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது.
பஞ்சாமிர்தத்தை பொதுவாக குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். சீல் உடைக்காத நிலையில் ஒரு மாதம் வரை அதன் சுவை மாறாமல் இருக்கும்.
ஏற்கனவே தபால் மூலம் பஞ்சாமிர்தம் பெறும் வசதி உள்ளது. விரைவில் தமிழக விமான நிலையங்களில் பஞ்சாமிர்த சிறப்பு விற்பனை நிலையம் அமைக்கும் திட்டமும் உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications
