புலிகள் ஆயுதங்களை கீழே போட கோரும் ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கை...
விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட வேண்டும். தங்களது பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழர்ள் வெளியேற வாய்ப்பளிக்க வேண்டும்.
பிணையாளிகளாக பிடித்து வைத்துள்ள மக்களை விடுவிக்க விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும். இதன் மூலம் அவர்கள் அரசு வசம் உள்ள பாதுகாப்பு பகுதிகளுக்கு செல்ல முடியும்.
ராணுவத்தின் நடவடிக்கைகள் அப்பாவி மக்களைக் கொல்லும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில்தான் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ராணுவம் அக்கறையுடன் உள்ளது. எனவேதான் கடந்த சில வாரங்களாக ராணுவத்தின் முன்னேற்றம் நிதானமாகவும், மெதுவாகவும் உள்ளது என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
வழக்கமாக ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று மிரட்டல் கலந்த தொணியில்தான் ராஜபக்சே அறிக்கை வெளியிடுவார், பேட்டி கொடுப்பார். ஆனால் முதல் முறையாக விடுதலைப் புலிகளுக்கு வேண்டுகோள் என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications