காங்.கிடம் பணம் வாங்கி விஜயகாந்த் தனித்து போட்டி-சேதுராமன்
திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட விஜயகாந்த் காங்கிரசிடம் இருந்து கோடி கணக்கில் பணம் வாங்கியுள்ளார் என மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் குற்றம் சாட்டினார்.
திண்டுக்கலில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தேர்தல் ஆய்வுக்கூட்டம் கிறிஸ்துவ வன்னியர் மஹாலில் நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு துரோகம் விளைவித்து வருகிறது. ஊழல்களில் தெரிந்த ஊழல், தெரியாத ஊழல் என 2 வகை ஊழல் செய்துள்ளது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறாது.
கூட்டணி அமைப்பது சம்பந்தமாக விஜயகாந்த் காங்கிரஸ் கட்சியுடன் பேசியுள்ளார். கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆலோசனையின் பேரில் தனியாக நிற்கிறார். இவர் ஊழலை பற்றி பேசுகிறார். இவர் கனவு பலிக்காது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
நாங்கள் அதிமுகவுடன் தோழமை ரீதியில் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் கூட்டணியில் மட்டும் அங்கம் வகிக்கிறோம். அதிமுக வெற்றிபெற நாங்கள் கடுமையாக உழைப்போம் என்றார் சேதுராமன்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications