குமரியில் கேரள பெண் மகளுடன் தற்கொலை முயற்சி
குமரி: கணவன் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த கேரள பெண் ஒருவர் கன்னியாகுமரி வந்து தனது மகளுடன் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். தற்போது அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மணல்தேரி சிலுவை நகர் கடற்கரையில் இன்று காலை ஒரு பெண்ணும், அவரது மகளும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர்.
அப்போது அந்த பக்கமாக சென்றவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். சுயநினைவின்றி இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
35 வயது மதிக்கத்தக்க தாய் நீல கலரில் பூப்போட்ட சேலையும், நீல கலர் ரவிக்கையும் அணிந்துள்ளார். மகளுக்கு 13 வயது இருக்கும். பிரவுன், மஞ்சள் கலந்த சுடிதார் அணிந்து இருந்தார். அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் வைத்திருந்த பையில் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதமும், விவாகரத்து கேட்டு அவரது கணவர் அனுப்பியிருந்த வக்கீல் நோட்டிசும் இருந்தது. அதிலிருந்து அந்த பெண்ணின் பெயர் கீதாவாக இருக்கலாம் என்றும், அவரது கணவர் பெயர் சுரேஷ் என்றும், அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து காரணமாக அந்த பெண் இங்கே வந்து மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குமரி சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் சசிகலா, திருவனந்தபுரம் என்றும் தெரியவந்தது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications