For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha in Nellai
திருநெல்வேலி: மத்தியில் அதிமுக உதவியுடன் அமையும் ஆட்சியில், இலங்கைத் தமிழர்களின் மறு புனரமைப்புக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.

இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றார். பிற்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜெயலலிதா. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சேர்ந்த அவர் பின்னர் நெல்லை டவுன், வாகையடி முனை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி தனது பிரசாரத்தை தொடங்கினார்.

பிற்பகல் 1.40 மணிக்கு பேசத் தொடங்கிய அவர் 2.20 வரை பேசினார். ஜெயலலிதாவின் பேச்சக் கேட்க ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்திருந்தனர்.

மேடையில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அண்ணாமலை நிற்க ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதா பேசுகையில் ..

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களித்து முழு வெற்றியை வழங்கினீர்கள். அதனை தொடர்ந்து மத்திய அரசில் திமுக செல்வாக்கு பெற்றது.

அந்த செல்வாக்கை தவறாக பயன்படுத்தி தன் நலன், தனது குடும்ப நலன், உறவின் நலன் போன்றவைகள மட்டும் வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி தமிழ்நாட்டுக்குகாக, தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. மத்திய அரசிடம் தமிழகத்தை அடகுவைத்து விட்டார் கருணாநிதி.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு அதிக பலன் பெற வாய்ப்புள்ளது. காரணம் எனக்கு எனது நலன், சுயநலன் கிடையாது. எனக்கு குடும்பமும் கிடையாது. தமிழக நலனே முக்கியம். மக்கள் நலனுக்காக மத்தியில் அமையும் அரசிடம் போராடி பெறுவேன். திட்டம் எதையும் விட்டு கொடுக்க மாட்டேன்.

மேலும் கடந்த காலங்களில்(எனது ஆட்சியில்) நம் தமிழகத்தில் அதிக அளவு உபரி மின்சாரம் இருந்தது. ஆனால் இன்று மின் உற்பத்தி இல்லாமல் தமிழகம் மின்சாரத்திற்கே விடுப்பு வழங்கி வருகிறது.

கடந்த 5 வருட மத்தியில் அமைந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகள் என்ன... விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை, தீவிரவாதம் அதிகரிப்பு போன்றவைதான்.

மைனாரிட்டி திமுக அரசு காங்கிரசிடம் அடி்மை சாசனம் எழுதி கொடுத்து விட்டு சரணாகதி அடைந்துவிட்டது. இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக தலைவர் கபட நாடகம் ஆடி வருகிறார் என்பதை நான் வெளிச்சம் போட்டி காட்டிய பிறகுதான் அவசர அவசரமாக அனைத்து கட்சிகளை கூட்டி விவாதித்தார்.

தமிழகத்தை கருணாநிதி குடும்பம் பாகம் போட்டு பிரித்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் சுருட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்த குடும்ப ஆட்சியை அகற்ற சரியான ,அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்துங்கள். தமிழகத்தில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மத்தியில் அமையும் அரசிடம் தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை போராடி பெறுவேன்.

நெல்லை தொகுதியில் உள்ள ராதாபுரம் பேரூந்து நிலையத்திற்கு பெயர் வைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. அதற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும்.

நெல்லை முதல் குமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம்-திருவனந்தபுரம் மலைவழிச்சாலை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

40 தொகுதிகளிலும் அதிமுக அணி வெற்றி பெற முழு ஆதரவு அளிக்க மக்களாகிய உங்களிடம் வேண்டுகிறேன். எனது கரத்திற்கு சக்தி கொடுங்கள். எனது குரல் இநதியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஒட்டு மொத்த தமிழக குரலாக எதிரோலிக்க வாய்ப்பளியுங்கள்.

மக்களாகிய உங்கள சக்தி கொண்டு தமிழக தேவைகளை மத்திய அரசிடம் பெற்றுதருவேன். இது உண்மை. நீங்கள் ஆதரவு தான் தமிழகத்திற்கு புதிய வரலாறு கிடைத்துள்ளது. முழு ஆதரவு இந்தியாவில் ஒரு புதிய வரலாறு எழுத பயன்படட்டும்.

தமிழகம் யாரை சுட்டி காட்டுகிறதோ அவர்களே இந்தியாவின் பிரதமர் என்ற நிலையை ஏற்படுத்த முழு ஆதரவு அளியுங்கள்.

எங்களது அணிக்கு வாய்ப்பளித்தால் தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலமாக்கப்படும். இங்கு வசிக்கும் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கபடும். தொழில் வளம் அதிகரிக்கப்படும். விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழும். குடும்ப ஆட்சியை அகற்றி ஜனநாயகம் தழைக்க பாடுபடுவோம். ஆளும் கட்சியின் ஆஜராகம் அடக்கப்படும்.

கடத்தல், கட்டபஞ்சாயத்து, ஓழிக்கப்படும். மணல், ரேசன் அரிசி கடத்தல் முற்றிலும் இல்லாமல் ஆக்கப்படும். வருமான வரிவிலக்கு உச்சகட்ட தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள 10 ஆயிரம் கோவில்களுக்கு அன்னதான தி்ட்டம் விரிவுப்படுத்தப்படும். எஸ்சி, எஸ்டி உயர் கல்வி மாணவ, மாணவிகளுக்கு லேப்டப் இலவசமாக வழங்கப்படும். வங்கிகளில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 6 லட்சம் கோவில் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

உலக வங்கியில் பதுக்கப்பட்டுள்ள ரூ.75 லட்சம் கோடி மீட்கப்படும். மத்திய அரசின் தபால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 8 லட்சம் பேர் பணியிடம் நிரந்தரம் செய்யப்படும். 10 கோடி வேலைவாய்ப்புகள் ஊராக வேலைவாய்ப்பு முலம் உருவாக்கப்படும்.

1974ல் திமுக அரசு நடக்கும்போது இந்திராகாந்தியால் தாரைவார்க்கப்பட்ட கட்சதீவு மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தலித் கிறிஸ்தவர்கள் இடஓதுக்கீடு, ஜெருசேலம் புனித பயணம் சென்றுவர மானியம் வழங்கப்படும். இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.

இலங்கையில் அல்லல்படும் தமிழர்கள் வாழ்வு முழு புனரமைப்பு பெறும் வகையிலும், சுயநிர்வாகம் பெறுவதற்கும் தனி ஈழம், கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மத்திய அரசு முலம் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஓதுக்கிடூ செய்யப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் உயரவும் வழி செய்யப்படும்.

இன்று நான் பேசும் இந்த இடம் குறுகலான சாலையாக உள்ளது. இது காவல் துறையின் சதியா.. கருணாநிதியின் சதியா...மக்களுக்கு தெரியும். எனக்கு இந்த இடம் பற்றி கவலை இல்லை. நிரந்தரமாக தமிழக மக்களின் இதயத்தில் இடம் இருக்கிறதே அதுவே முக்கியம் என்றார் ஜெயலலிதா.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான தொணடர்கள் திரண்டு நின்று கோஷம் எழுப்பி கொண்டேயிருந்தனர். ஜெவின் வருகை நெல்லை மாவட்ட அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா. அங்குள்ள நாகராஜா திடலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

நாளை மதியம் சங்கரன்கோவிலில், மாலை தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.

ஜெயலலிதாவின் பிரசார பயணம்..

20-ம் தேதி தேனி-திண்டுக்கல், 22 பரமக்குடி-சிவகங்கை, 23 சிவகாசி-மதுரை, 25 ஈரோடு-சேலம், 26 தர்மபுரி-கிருஷ்ணகிரி, 27 திருப்பூர்-பொள்ளாச்சி, 29 நாமக்கல்-முசிறி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

30-ந் தேதி தஞ்சாவூர்-மயிலாடுதுறை, திருவாரூர். மே 2-ந் தேதி கரூர்-திருச்சி. 3-ந் தேதி மேட்டுப்பாளையம்-கோயம்புத்தூர். 4-ந் தேதி வேலூர்-ஆரணி. 5-ந் தேதி கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

மே 6-ந் தேதி விழுப்புரம்-கடலூர். 7-ந் தேதி புதுச்சேரி-சிதம்பரம். 8-ந் தேதி காஞ்சீபுரம்-அரக்கோணம். 9-ந் தேதி பல்லாவரம்-ஆவடி. 10-ந் தேதி தியாகராயநகர்-சேப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரசாரத்தை மேற்கொள்கிறார் ஜெயலலிதா.

அனைத்து இடங்களுக்கும் ஹெலிகாப்டரிலேயே போய் பிரசாரம் செய்யவுள்ளார் ஜெயலலிதா. தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்யும்போது இரவு மதுரை வந்து ஹோட்டலில் தங்குகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X