• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை கண்டித்து மலேசியாவில் தமிழர்கள் பேரணி

By Staff
|

கோலாலம்பூர்: இலங்கையில் நடந்து வரும் தமிழின அழிப்பிற்கு ராணுவத் தளவாடங்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், ராணுவ வல்லுநர்களை வழங்கி தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாகக் கூறியும், அதை கண்டித்தும் மலேசியாவில் பிரமாண்ட கண்டனப் பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை கடுமையாக கண்டித்து கோஷமிட்டனர்.

இவர்களின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும் கால்களால் மிதித்தும் தமது எதிர்ப்பை, வெறுப்பை வெளிக்காட்டினர்.

போராட்டத்தின் இறுதியில் அதில் கலந்து கொண்ட மலேசிய நாட்டு எம்.பிக்கள், உலக அமைதி முகமையின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர், இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கிறிஸ்துவுக்கு முன் 2750 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இலங்கையில் வாழும் தனது சொந்த இரத்தம், தொப்புள் கொடி உறவுகள் அநியாயமாக சாதல் கண்டு இந்தியா மனம் இரங்கவில்லை.

எங்களின் மனுவை மதித்து இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.

இலங்கை இனவாத அரசு கட்டவிழ்த்து விடும் இன ஒழிப்பிற்கு ஆண், பெண், குழந்தைகள் வேறுபாடின்றி அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

தொடக்க காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வளர்த்த இந்தியா இன்று சிறிலங்கா அரசின் பக்கம் நின்று தமிழர் போராட்டத்தை முற்றாக துடைத்து ஒழிக்க துணை நிற்கின்றது.

இலங்கையில் தமிழினத்தை முற்றும் முழுதாக வேரறுக்க பெருமளவிலான ராணுவ உதவிகளை அனைத்துவித எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இதுவரையில் 1,00,000 தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமலும் போய் உள்ளனர். (வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்த கணக்கெடுப்பில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,50,000 எனக் காட்டுகின்றது) இதுவரையில் 20,000 தமிழ்ச் சிறுவர்கள் ஆதரவற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான பள்ளிகள், வீடுகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், கோவில்கள், கிராமங்கள் என தமிழர்களின் வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த 111 நாட்களில் (ஜனவரி 1 தொடங்கி ஏப்ரல் 20 வரை) 6,043 தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 11,749 தமிழ் மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

நீங்கள் வழங்கும் ஆயுதங்கள் தொடர்ந்து தமிழ் மக்களை பல வழிகளில் கொன்றொழிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதைத் தாங்கள் அறிவீர்கள். ஆனால், சொந்த நலனுக்காக இப்படியான மனிதநேயமற்ற நடவடிக்கைகள் தொடரவும் இந்தியா அனுமதியளித்து வருகின்றது.

பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள் சிறிலங்கா அரசிற்கு ஆயுத வழங்கலைத் தடுப்பதற்காக முற்றும் முழுதான ஒரு நட்புறவை இலங்கை அரசுடன் ஏற்படுத்தி தமிழினப் படுகொலைத் தொடர உதவுகிறது.

அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து எப்படியான தீர்வினை தமிழ் மக்களுக்கு முன்வைக்கப் போகிறீர்கள்?

நீங்கள் உருவாக்கப்போகும் தேசியம் எந்த வகையைச் சேர்ந்தது?

மலேசிய தமிழர்களான நாங்கள் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகள் செய்வதை மிகக் கடுமையாக கண்டிக்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் கவனத்திற்கு ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து உடனடியாக கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யவும், தமிழர்களின் நாசமாக்கப்பட்ட வாழ்வு மீள்கட்டமைக்கப்படவும், தமிழர்களின் உரிமை பாதுகாக்கக்கப்படவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X