இத்தாலி பிரதமரின் காதல் லீலைகள்-டைவர்ஸ் கேட்கும் மனைவி

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் காதல் லீலைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத அவரது மனைவி வெரோனிகா லாரியோ, விவாகரத்து கோரியுள்ளார்.

வெரோனிகா ஒரு முன்னாள் நடிகை ஆவார். பெரலஸ்கோனிக்கு அவர் 2வது மனைவி ஆவார். பெர்லஸ்கோனியை அவர் 1990ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்க்கை இப்போது முடிவுக்கு வருகிறது. விவாகரத்து கோரி மனு செய்யப் போவதாக பெர்லஸ்கோனியிடம் நேற்று தெரிவித்து விட்டாராம் வெரோனிகா.

இதற்காக ஒரு வக்கீலையும் பிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இந்த முடிவை தான் விரும்பி எடுக்கவில்லை என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தன்னைத் தள்ளி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் வெரோனிகா.

சமீப காலமாகவே பெர்லஸ்கோனிக்கும், வெரோனிகாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை. காரணம், பெர்லஸ்கோனியின் மன்மத லீலைகள். சமீப காலமாக இருவரும் சேர்ந்து தங்குவதில்லையாம்.

பெர்லஸ்கோனியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் மாரா கர்ஃபாங்கனாவுக்கும், பெர்லஸ்கோனிக்கும் இடையே காதல் உறவு இருந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. மாராவும் ஒரு முன்னாள் நடிகைதான்.

இதைக் குறிப்பிட்டு பெர்லஸ்கோனிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள் மூலம் பகிரங்க கடிதம் எழுதியிருந்தார் வெரோனிகா. அன்று முதலே இருவருக்கும் இடையே சுமூக உறவு இல்லை.

கடந்த மார்ச் மாதம் மாராவுடன், கூட்டம் என்ற பெயரில் பெர்லஸ்கோனி, ஜாலியாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இனியும் பொறுக்க முடியாது என்பதால்தான் வெரோனிகா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மாராவுடன் நீண்ட காலமாக ரகசிய காதலை பெர்லஸ்கோனி கடைப்பிடித்து வந்ததாகவும் 2008ம் ஆண்டு அவரை அமைச்சராக்கி காதலை மேலும் வலுவாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஏகப்பட்ட மாடல் அழகிகள், நடிகைகளை பெர்லஸ்கோனி தேர்வு செய்ய ஆரம்பித்ததும் வெரோனிகாவுக்குப் பிடிக்கவில்லை.

இதை விட உச்சமாக 18 வயதே ஆகும் எய்டா யெஸ்பிகா என்ற மாடல் அழகியின் பிறந்த நாளை, அவரது வீட்டுக்கே சென்று கொண்டாட பெர்லஸ்கோனி முடிவு செய்ததும் வெரோனிகாவை கொதிப்படைச் செய்து விட்டது.

இதுகுறித்து வெரோனிகா ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது குழந்தைகளின் பிறந்த நாளுக்கு அவர் முறையாக வந்ததே இல்லை. இந்த நிலையில், யாரோ ஒரு அழகியின், அதுவும் தனது மகள் வயதையொத்த பெண்ணின் பிறந்த நாளை அவரது வீட்டுக்கே போய் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியிருந்தார் அவர்.

இப்படி ஏகப்பட்ட கசமுசாக்களில் பெர்லஸ்கோனி தொடர்ந்து சிக்கி வருவதால் திருமணத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டாராம் வெரோனிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+