பிரபாகரனை நெருங்கவில்லை: இலங்கை ராணுவம் பல்டி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் தற்போது 800 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே உள்ளனர். அங்கு பதுங்கு குழிகளையும், தற்காப்பு அரண்களையும் அமைத்து வைத்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடன் இருக்கும் தலைவர்களை நாங்கள் நெருங்கவில்லை. அவர்கள் அனைவரும் அங்குதான் இருப்பார்கள் என நம்புகிறோம்.
விடுதலைப் புலிகள் தற்போது உள்ள பகுதியைச் சுற்றிலும் பெருமளவில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது என்றார்.
ராணுவத்தின் செய்திகளை எப்போதுமே நம்ப முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications