ஈழம்-பெங்களூரில் தமிழர்கள் பிரமாண்ட பேரணி
பெங்களூர்: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை காக்க கோரியும் நேற்று பெங்களூரில் தமிழர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி நடந்தது.
பெங்களூரில் கே.ஆர்.புரம் தாசில்தார் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட்ட இந்த பேரணிக்கு நடுநிலை மனப்பான்மை பொதுமக்கள் சங்க தலைவர் ரவி பிரகாஷ் தலைமை தாங்கினார்.
உலக தமிழர் இளைஞர் வழிகாட்டும் தளம் அமைப்பின் தலைவர் கணேசன், பெங்களூர் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராசு மாறன, கர்நாடக தமிழர் கூட்டமைப்பு தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தாசில்தார் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியில் குழந்தைகள், பெண்கள் என தமிழர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் பிரபாகரன் படத்தை ஏந்தி சென்றனர்.
புலிகளுக்கு சிகிச்சை-கர்நாடக அரசு:
இந் நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. அதன் விளைவால் கர்நாடகத்தில் ஏற்படும் பாதிப்பை தடுப்பது, மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்டுவது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
இலங்கையில் இருந்து காயமடைந்து வந்தவர்கள் யாரும் சிகிச்சை பெற வந்தால், அவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.
சிகிச்சை பெறுபவர்கள் குறித்தும், புகலிடம் தேடி வருபவர்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கும்படி போலீஸ் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். அப்படி யாராவது வந்தால், அவர்கள் குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு ராமேஸ்வரம் உள்பட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்களும், தமிழக அரசுடன் நிரந்தர தொடர்பில் உள்ளோம். கர்நாடகத்தில் யாரும் நுழைய வாய்ப்பு இல்லை. அதேபோல் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் ஆச்சார்யா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications