காதல்.. 15 வயது மகளை குத்திக் கொன்ற தந்தை
சென்னை: காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போன 15 வயது மகளை தந்தையே கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்றார்.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகரைச் தெருவைச் சேர்ந்த சலீம் ஷேக்கின் மனைவிகள் சுரியா பானு, சையத் நிஷா.
2வது மனைவியின் மகள் யாஸ்மின் (15). இவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரைக் காதலித்துள்ளார்.
இந்தக் காதலை தந்தை சலீம் ஷேக் கண்டித்தார். பெற்றோரின் எதிர்ப்பு அதிகரித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
எங்கு செல்வது என்று தெரியாமல் பல இடங்களிலும் சுற்றிய இவர்கள் பெற்றோர் சம்மதத்தை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் திரு.வி.க. நகரில் இஸ்மாயிலின் உறவினர் வீட்டில் தங்கினர்.
இதையறிந்த சலீம் ஷேக் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாகக் கூறி மகளை வீட்டிற்கு அழைத்தார். இதையடுத்து தந்தையுடன் வீட்டிற்குச் சென்றார் யாஸ்மின்.
ஆனால், வீட்டிற்கு வந்ததும் படிக்கிற வயதில் காதல் வேண்டாம் என்று கண்டித்தார். இதையடுத்து தந்தை-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சலீம் ஷேக் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து யாஸ்மினை சரமாரியாக குத்தினார்.
இதில் உடல் முழுவதும் 13 இடங்களில் குத்து விழுந்தது.
இதில் அந்த இடத்திலேயே யாஸ்மின் பலியானார். இதையடுத்து கத்தியுடன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சலீம் ஷேக் சரணடைந்தார்.
சலீம் ஷேக் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நான் ஆட்டோ டிரைவராக இருக்கிறேன். எனக்கு இரு மனைவிகள். 4 குழந்தைகள் உள்ளனர்.
2வது மனைவிக்கு மனநலம் சரியில்லாததால் 4 குழந்தைகளையும் முதல் மனைவிதான் கவனித்து வருகிறார். என் பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும் ென்று ஆசைப்பட்டேன்.
யாஸ்மின் படித்து பெரிய ஆளாக வருவாள் என்று கனவு கண்டேன். ஆனால், ஒருநாள் நான் சவாரி சென்றபோது யாஸ்மின் இஸ்மாயிலுடன் நெருக்கமாக சுற்றியதை பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் கண்டித்தேன்.
ஆனாலும் அவள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு காதலனோடு சுற்றி இருக்கிறாள். அதைக் கேள்விப்பட்டு மீண்டும் கண்டித்தேன். காலில் சூடும் வைத்தேன். வலியால் துடித்தவள் இனிமேல் தப்பு செய்யமாட்டேன் என்று குரான் மீது சத்தியம் செய்தாள். இனி திருந்தி விடுவாள் என்று நம்பினேன்.
ஆனால் அவள் திருந்தவில்லை. வீட்டை விட்டு ஓடி போய் எங்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தினாள். இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதை விட தொலைந்து போகட்டும் என்று ஆத்திரத்தில் குத்தி கொன்றேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications