தமிழக மீனவர்கள் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் மீது இலங்கை கப்பற்படை தனது கப்பலால் மோதி, தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு படகுகள் உடைந்து மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கப்பற்படையினர் ஒரு பெரிய கப்பலிலும், 5 சிறிய ரோந்து படகுகளிலும் வந்துள்ளனர்.

தமிழக மீனவர்களை உடனே திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர். பின்னர் வானத்தை நோக்கி சுட்டனர். அவர்கள் கம்பால் அடித்தும், கயிற்றால் கட்டியும் துன்புறுத்தியுள்ளனர். இதில் சுமார் 10 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக மீனவர்கள் கரை திரும்ப துவங்கினர். அப்போது இலங்கை கப்பல் வேண்டுமென்றே ராமேஸ்வரம் மீனவர் ஒருவரின் படகில் மோதியது. இதில் படகின் ஒரு பகுதி உடைந்து, நீர் உள்ளே புகுந்தது. இதையடுத்து படகு மூழ்கியது.

அதேபோல் மற்றொரு சம்பவத்தில் இலங்கை கப்பற்படை கப்பல் இன்னொரு தமிழக மீனவ கப்பலில் மோதி, அதையும் மூழ்கடித்தது. அந்த படகில் இருந்த மீனவர்கள் 5 பேர் கடலில் குதித்தனர். சுமார் 1 மணி நேரம் கடலில் போராடிய அவர்களை மற்ற மீனவர்கள் சேர்ந்து காப்பாற்றினர்.

9 மீனவர்கள் விடுதலை...

இந்நிலையில் இலங்கை கப்பற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை இந்திய கடலோரக் காவல்படை மூலம் மண்டபம் அழைத்து வரப்படுவார்கள் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+