புலிகளை வீழ்த்த பேருதவி - பாக். விமானப்படைக்கு இலங்கை நன்றி
இஸ்லாமாபாத்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற பெரும் உதவிகளைச் செய்ததற்காக பாகிஸ்தான் விமானப்படைக்கு இலங்கை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானுக்கான இலங்கை துணைத் தூதர் ஜெயலத் வீரக்கடி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பாகிஸ்தான் விமானப்படை, அனைத்து விதமான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளைச் செய்தது.
பாகிஸ்தான் விமானப்படையின் இந்த பேருதவியில், தொழில்நுட்ப உதவி, ஆயுத உதவி, பயிற்சி, சீன ரக போர் விமானங்களை இயக்குவதற்கான உதவி உள்ளிட்டவை அடங்கும்.
பாகிஸ்தானும், இலங்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தீவிரவாத மிரட்டலை சந்தித்து வந்தன. பின்னணியும், சூழ்நிலையும்தான் வேறு வேறாக உள்ளது.
தற்போது இலங்கை தனது தீவிரவாதத்திற்கு எதிரான போரில் வென்று விட்டது. இந்த அனுபவத்தை பிற நாடுகளுக்கும் சொல்லித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றியது முதலே இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர். அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் உதவிகள் கிடைத்ததே இதற்குக் காரணம்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் சிறந்த பயிற்சி மற்றும் ஒத்துழைப்பால் புலிகள் இயக்கத்தை தோற்கடித்து விட்டோம் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications