For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2002லேயே இருக்கும் சென்னை ஏர்போர்ட் வெப்சைட்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தின் இணையதளம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இணையதளத்திற்குப் போனால் 2002ம் ஆண்டு தகவல்களே இன்னும் உள்ளன.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில் தமிழகத்திற்கு குறிப்பாக சென்னைக்கு தனி இடம் உள்ளது. பெங்களூரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சியில் உள்ளது. ஆனால் சென்னை நகரில் உள்ள, நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் இணையதளம், இன்னும் அறுதப் பழசாகவே உள்ளது.

இது பிராட்பேன்ட் காலம். எல்லாமே மின்னல் வேகத்தில் உள்ள நிலையில், சென்னை விமான நிலையம் மட்டும் தனது இணையதளத்தை முறையாக அப்டேட் செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அதி வேக பிராட்பேண்ட் இணைப்பு கொண்ட இணையதள பிரவுசிங் மையம் ஒன்று உள்ளதுதான் இதில் வேடிக்கையிலும் பெரும் வேடிக்கை.

இதை விட பெரிய கொடுமை, சென்னை விமான நிலையத்துக்கென தனியான இணையதளம் இல்லை என்பதுதான். இந்திய விமான நிலையங்களின் ஆணையக தளத்தில்தான் சென்னை விமான நிலையத்திற்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.

அதேசமயம், மும்பை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி விமான நிலையங்களுக்கென அட்டகாசமான இணையதளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தின் பக்கத்தில் எல்லாமே பழைய தகவல்களாக உள்ளன. அதாவது 2002ம் ஆண்டு தகவல்கள்தான் பெரும்பாலும் உள்ளன.

இந்திய விமான நிலையங்களின் ஆணையகத்துக்கென தனியாக ஒரு ஐடி டிவிஷன் உண்டு. இதுதான் அனைத்து விமான நிலையங்களின் இணையதளங்களையும் பராமரிக்கும் பொறுப்பை வைத்துள்ளது. ஆனால் அவ்வாறு அவர்கள் செய்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

ஓட்டையான ஒரு டிசைன், பழைய தகவல்கள்தான் இதில் உள்ளன.

சென்னை தொடர்பான இணையதளப் பக்கத்திற்குப் போய் பார்த்தால் உள்ளூர் விமான நிறுவனங்களின் பட்டியலில் சஹாரா ஏர்லைன்ஸ் என்ற பெயர் உள்ளது. இந்த நிறுவனம் ஜெட்லைட் என்று பெயரை மாற்றி பல காலமாகிறது. அதேபோல விமான நிலைய இயக்குநர் திணேஷ் குமார் என்ற பெயர் உள்ளது. புதிய இயக்குநர் பணிக்கு வந்து பல காலமாகிது.

ஏன் இப்படி என்று இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் கே.நடராஜனிடம் கேட்டபேது, இந்த இணையதளம் சென்னையில் அப்டேட் செய்யப்படுவதில்லை. டெல்லியில்தான் இதன் கட்டுப்பாடு உள்ளது.

விரைவில் இது சரி செய்யப்படும். மேலும் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து லைவ் ஆகவும் அப்டேட் செய்யவுள்ளனர் என்றார்.

இதற்கு நேர் மாறாக தற்போது தனியார் மயமாகியுள்ள பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்களின் இணையதளங்கள் படு பக்காவாக உள்ளன. கண்ணைக் கவரும் டிசைன், அப்டுடேட் தகவல்கள் என கலக்குகிறது இந்த இணையதளங்கள்.

மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், கிளம்பும் விமானங்கள் குறித்த லைவ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏதாவது ஒரு விமானம் குறித்த தகவல் தேவையென்றால் அதை சர்ச் செய்து கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது.

இதற்கும் மேலாக விமான நிலைய மேகசின் ஆன மும்பை டச்டவுன் என்பதன் பிடிஎப் பார்மட்டையும் கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியையும் செய்து தந்துள்ளனர்.

சென்னை வெப்சைட் மட்டும் இன்னும் விளக்கெண்ணெய் குடித்த குரங்கு போல அலங்கோலமாக இருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X