சொத்து தகராறு-தாய் மீது ஆசிட் வீசிய மகன்!!
கோவை: கோயம்புத்தூரில் தனது பெயருக்கு சொத்தை மாற்றி தர மறுத்த தாய் மீது மகன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் செளரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவருக்கு பொன்னுத்தாய் பீவி என்ற மனைவியும், 8 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் நான்கு பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள்.
இவர்களது மகன்களில் மூன்று பேர் அப்பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மூன்று மகன்களில் ஒருவரான முகமது நசீர் என்பவர் அந்த மட்டன் கடைகளை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி அடிக்க்டி பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அவர்கள் இவரது பேச்சை கேட்கவில்லை. மேலும், கடைகளை ஒருவருக்கே கொடுக்க முடியாது என கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வந்த நசீர், தாயாரிடம் எனக்கு அந்த மட்டன் கடையை எழுதி கொடுங்கள் என அடம்பிடித்துள்ளார்.
ஆனால் பொன்னுத்தாய் பீவி மறுத்துவிட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த நசீர் தன்னை பெற்ற தாய் என்பதை கூட மறந்து பொன்னுத்தாய் பீவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் பொன்னுதாய் பீவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விபட்ட போலீசார் நசீரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications