For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாவுக்கு தினசரி வரும் 30 கொலை மிரட்டல்கள்

By Staff
Google Oneindia Tamil News

Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு ஒரு நாளைக்கு 30க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வருகிறதாம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டு வேறு போகிறதாம்.

இன் தி பிரசிடென்ட்ஸ் சீக்ரட் சர்வீஸ் என்ற நூலை ரொனால்ட் கெஸ்லர் என்பவர் எழுதியுள்ளார். அதில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்றார் ஒபாமா. அதன் பின்னர் அவருக்கு தனி நபர்கள், குழுக்களிடமிருந்து சரமாரியாக கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளதாம்.

முன்பு ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது ஆண்டுக்கு 3000 கொலை மிரட்டல்கள் வருமாம். ஆனால் இப்போது 400 சதவீதம் அதிகரித்து விட்டதாம்.

ஒபாமாவுக்கு வரும் பெரும்பாலான மிரட்டல்களை அவரது ரகசியப் பாதுகாப்பு சேவைப் பிரிவு அதிகாரிகள் வெளிப்படுத்துவதில்லையாம். அதுபோன்ற மிரட்டல்களை வெளிப்படுத்தினால் மேலும் மேலும் கொலை மிரட்டல்கள் அதிகரிக்கும் என்பதால் இப்படிச் செய்கிறார்களாம்.

கடந்த ஆண்டு வெள்ளை நிறவெறியர்கள் டென்னஸ்ஸியில் வைத்து ஒபாமாவைக் கொல்லத் திட்டமிட்டனராம்.

இப்போது இணையதளங்களில் சர்ச் என்ஜின்களில் மிகவும் பாப்புலரான வார்த்தையாக "assassinate Obama" என்ற பதம் பிரபலமாகியுள்ளதாம்.

ஒபாமா பதவியேற்பின்போது வெள்ளை நிறவெறியர்களோ அல்லது தீவிரவாதிகளோ தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் வரலாறு காணாத பாதுகாப்பை மேற்கொண்டிருந்தது அமெரிக்க பாதுகாப்புத் துறை.

அன்றைய தினம் சோமாலியாவைச் சேர்ந்த இஸ்லாமியக் குழுவான அல் ஷபாப் என்ற அமைப்பு ஒபாமாவைக் கொல்லவோ அல்லது பதவியேற்பு விழாவை சீர்குலைக்கவோ திட்டமிட்டிருந்ததா தற்போது உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக மிக மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிலும் ஒரு ஓட்டையாக, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட விஐபிக்கள் மற்றும் ஒபாமா பிரசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டிருந்த பகுதி வழியாக சாதாரணமாக நடந்து சென்றனராம்.

ஒபாமாவுக்கு வரும் மிரட்டல்களில் முக்கால்வாசி டுபாக்கூர் ரகத்தைச் சேர்ந்தவையாம். இருப்பினும் சாதாரணமாக அவற்றை எடுத்துக் கொள்ள விரும்பாத அமெரிக்க ரசிய புலனாய்வுப் பிரிவு, ஒவ்வொரு மிரட்டலையும் தீர விசாரிக்கிறதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X