அதிமுக வாக்குகளை திமுக-தேமுதிகவுக்கு பரிமாறிய ஜெ!
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தாலும் அதிமுகவினர் பெருமளவில் ஓட்டுப் போட்டுள்ளனர். அதிமுகவின் வாக்குகளை திமுகவும், தேமுதிகவும் பெருமளவில் பங்கிட்டுக் கொண்டுள்ளது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.
குறிப்பாக தேமுதிகவுக்கு அதிமுக ஓட்டுக்கள் கணிசமாக கிடைத்துள்ளன. திமுகவுக்கும் ஒரு பகுதி ஓட்டுக்கள் போயுள்ளன. ஆனால், அதிமுக ஓட்டுக்களால் இடதுசாரிகளுக்கோ, பாஜகவுக்கோ பெருமளவில் பலன் கிடைக்கவில்லை.
கம்பம்...
கம்பத்தில் தேமுதிகவின் வாக்கு வங்கி அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இங்கு 12,360 ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை போட்டியிட்ட அருண்குமார் 24,142 வாக்குகளைப் பெற்றுள்ளார். இங்கு தேமுதிகவுக்கு வாக்கு பலம் அப்படியே இரட்டிப்பாகியுள்ளது
அதிமுகவிலிருந்து கணிசமான வாக்குகள் தேமுதிகவுக்குப் போயுள்ளதையே இது காட்டுகிறது.
அதேபோல, திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கடந்த முறை மதிமுக சாகர்பில் போட்டியிட்டு வாங்கியதை விட இம்முறை கூடுதலான ஓட்டுக்களைப் பெற்றுள்ளார்.
கடந்த முறை மதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் 50,761 வாக்குகளைப் பெற்றார். இம்முறை கூடுதலாக 30,754 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் திமுகவுக்கு இங்கு 48,803 ஓட்டுக்கள் கிடைத்தன. இம்முறை 81,515 வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவுக்கும் இங்கு வாக்குகள் இரட்டிப்பாகியுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் ...
கடந்த பொதுத் தேர்தலில் இங்கு வென்ற காங்கிரஸ் கட்சிக்கு 38,188 வாக்குகள் கிடைத்தன. ஆனால் இம்முறை, 53,827 வாக்குகள் கிடைத்துள்ளன.
தேமுதிக கடந்த தேர்தலில் வெறும் 3,166 வாக்குகளையே பெற்றது. ஆனால் இம்முறை 22,468 வாக்குகளை அள்ளியுள்ளது. கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும்பாலானவை அதிமுக வாக்குகளே.
காரணம், கடந்த தேர்தலில் அதிமுக இங்கு 36,556 வாக்குகளைப் பெற்றது. கிட்டத்தட்ட இதில், முக்கால்வாசி ஓட்டுக்கள் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பர்கூர்..
பர்கூரிலும் அதிமுக வாக்குகளை அமோகமாக அள்ளியுள்ளது தேமுதிக. கடந்த முறை இங்கு தேமுதிக வேட்பாளர் கோவிந்தராஜ் 11,157 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
ஆனால் இம்முறை போட்டியிட்ட வி.சந்திரன் 30,378 வாக்குகளைக் குவித்திருக்கிறார்.
திமுகவும் இங்கு தனது வாக்குகளை அதிகரித்துள்ளது. கடந்த முறை போட்டியிட்ட வெற்றிச் செல்வனுக்கு 58,091 வாக்குகள் கிடைத்தன. ஆனால் இம்முறை திமுக வேட்பாளர் நரசிம்மனுக்கு 89,481 வாக்குகள் கிடைத்துள்ளன.
கடந்த முறை அதிமுக பர்கூரில் 61,299 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலை விட இம்முறை திமுகவுக்கு 30,228 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் அதிமுக வாக்குகளே.
இதன்மூலம் அதிமுகவின் வாக்குகளை திமுகவும், தேமுகவும் கிட்டத்தட்ட சமமாக பகிர்ந்து கொண்டுள்ளன.
இளையான்குடியி்ல்..
இளையான்குடி தொகுதியில் அதிமுக வாக்குகளை அப்படியே அள்ளிவிட்டது தேமுதிக. கடந்த தேர்தலில் வெறும் 2,705 ஓட்டுக்களை வாங்கிய அக் கட்சி இப்போது 7 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இவை அப்படியே அதிமுக வாக்குகளே ஆகும்.
தொண்டாமுத்தூரி்ல்..
தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட மு.கண்ணப்பன் 1,23,490 ஓட்டுக்கள் வாங்கினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் 1,13,596 ஓட்டுக்கள் பெற்றார். ஆனால், இம்முறை காங்கிரஸ் வேட்பாளரால் அந்த அளவுக்கு ஓட்டுக்களைப் பெற இயலவில்லை.
கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு 1,246 வாக்குகள் குறைந்துள்ளன. தேமுதிகவும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பெரிய அளவில் வாக்குகளை அதிகரிக்கவில்லை.
இந்தத் தொகுதியில் போட்டியிட்ட கொங்கு நாடு கட்சியும் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை.
இடைத் தேர்தல் நடந்த 5 தொகுதிகளில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும்தான் திமுக கூட்டணியோ, தேமுதிகவோ கடந்த தேர்தலை விட அதிகளவில் கூடுதல் வாக்குகளைப் பெறவில்லை.
மொத்தத்தில திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. அதிமுக வாக்காளர்களில் கணிசமானவர்கள் திமுக-காங்கிரசுக்கும், தேமுதிகவுக்கும் வாக்களித்துள்ளனர்.
அதிமுக வாக்குகளை திமுக-காங்கிரஸ் கூட்டணியும், தேமுதிகவும் பங்கு போட்டுக் கொண்டுள்ளன.
இது தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வியாகவே கருதப்படுகிறது. அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்றாகிவிட்டது.
இந்தமுறையும் வாக்கு எந்திரத்தைக் குறை கூறிவிட்டு தப்பிக்க முயலாமல் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அவர் இறங்க வேண்டி நேரம வந்துவிட்டது. இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் அவர் திமுகவுடன் அல்ல, தேமுதிகவின் இடத்தைப் பிடிக்க போட்டி போட வேண்டி வரலாம்.
-
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின்











Click it and Unblock the Notifications