ஈவ்டீசிங்-நாகர்கோவிலில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு
வள்ளியூர்: வள்ளியூர் அருகே ஈவ்டீசிங்கால் மனமுடைந்த 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈவ்டீசிங், ராகிங் போன்ற கொடுமைகளை தடுக்க எவ்வளவோ சட்டங்கள் வந்த போதும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
இந்நிலையில் வள்ளியூர் அருகே கன்னாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று மாணவிகள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் சில மாணவர்கள் அவர்களை கேலி, கிண்டல் செய்துவந்துள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தன்று அந்த மூன்று மாணவிகளும் டியூசனுக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை பின் தொடர்ந்த அந்த மாணவர்கள், அவர்கள் அழகாக இல்லை என கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த 3 மாணவிகளும் எலி மருந்தை குடித்து, மயங்கி விழுந்தனர்.
இதைக்கண்ட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.
இது குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளி மாணவர்கள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications