For Daily Alerts
Just In
அத்வானியுடன் மோகன் பகவத் சந்திப்பு - பிரச்சினை தீரும் என நம்பிக்கை

டெல்லி வந்துள்ள மோகன் பகவத்தும், அத்வானியும் நேற்று சந்தித்துப் பேசினர். அதேபோல பகவத்தை, பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அத்வானியைச் சந்தித்தார் மோகன் பகவத். காலை உணவை அவருடன் இணைந்து சாப்பிட்டார். பின்னர் இருவரும் பாஜக விவகாரம் குறித்து விவாதித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த பகவத் செய்தியாளர்களிடம் பேசவில்லை. இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மதன் தாஸ் தேவி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவில் நிலவும் பிரச்சினைகளை அக்கட்சியின் தலைவர்கள் ஒருங்கிணைந்து சந்திப்பார்கள் என்று அத்வானி, மோகன் பகவத்திடம் உறுதியளித்துள்ளார். பிரச்சினைகள் விரைவில் தீரும் என்று நம்புகிறேன் என்றார்.