For Daily Alerts
Just In
'வீக்' மன்மோகனை ஏற்ற மக்கள் 'இரும்பு மனிதர்' அத்வானியை நிராகரித்து விட்டார்களே - தாக்கரே நக்கல்

இதுகுறித்து தனது சாம்னா இதழில் தாக்கரே எழுதியுள்ள தலையங்கம்...
நேற்று வரை அத்வானி பிரதமர் வேட்பாளராக இருந்தார். பிரசாரத்தின்போது மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறி வந்தார். ஆனால் மக்கள் இரும்பு மனிதரான அத்வானியை விட்டு விட்டு பலவீனமான மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்து விட்டனர். இது நிச்சயம் அத்வானிக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.
பாஜகவில் நடந்து வரும் உட்கட்சிப் பூசல் கவலை தருவதாகவே உள்ளது. ஆனால் இதற்காக எதிர்வரும் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் 200 (மொத்தம் 288 தொகுதிகள்) தொகுதிகளை சிவசேனா எடுத்துக் கொள்ளும் என்று வெளியாகும் செய்திகள் தவறு, அப்படி எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார் தாக்கரே.