For Daily Alerts
Just In
பீகார் கோவில் கூட்ட நெரிசலில் 3 பெண்கள் பலி
பாட்னா: பீகார் மாநிலம் ஜெகன்பாத் மாவட்டத்தில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
ஜெகன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் சித்தநாத் கோவில் உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்குக் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
யாரோ சிலர் புரளி கிளப்பியதால்தான் திடீர் நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மக்கள் வேகம் வேகமாக வெளியேற முயன்றனர். இந்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.