விபத்து நடந்த நல்லமலாவில் ரெட்டிக்கு நினைவுசின்னம்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த 2ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டம், வேலை வாய்ப்பு திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், வீடு கட்டும் திட்டம், சுயதொழில் கடன் உதவி, முதியோர் பென்சன், ரூ.2-க்கு கிலோ அரிசி போன்ற நலத்திட்டங்களால் பயனடைந்த மக்கள் பலர் அதிர்ச்சியால் மரணமடைந்தனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதுவரை சுமார் 500 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் பலியான நல்லமலா காட்டு பகுதியில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இது குறித்து ஆந்திர சுற்றுலா துறை அமைச்சர் கீதா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
மக்களி்ன் உண்மை தலைவராக திகழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மரணம் ஆந்திராவை நிலை குலையச் செய்துவிட்டது. அவரது கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டியது ஆந்திர அரசின் கடமை.
அவர் விபத்தில் மரணமடைந்த நல்லமலா காட்டு பகுதிக்குள் விரைவில் நினைவுச்சின்னம் பிரமாண்டமாக அமைக்கப்படும். அவரது நினைவுச்சின்னத்தை பார்வையிட மக்களுக்கு போதுமான சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள புலிவெந்துலா பகுதியில் இருக்கும் அவரது சமாதியிலும் நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.
பிரேத பரிசோதனை போலீசிடம் ஒப்படைப்பு...
இந்நிலையில் விபத்தில் பலியான ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள், கர்னூல் மாவட்ட போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து கர்னூல் மாவ்டட எஸ்பி ஸ்ரீகாந்த் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை சீல் வைத்து எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பது தெரியிவில்லை என்றார்.
இந்த அறிக்கை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி மற்றும் விமான போக்குவரத்து துறையினரிடம் (டிஜிசிஏ) ஒப்படைக்கப்பட இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications