சோனியாவை சந்திக்கிறார் திருநாவுக்கசர் - காங்.கில் இணைகிறார்

1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அத் தேர்தலுக்குப் பின்னர் துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர். அன்று முதல் எம்.ஜி.ஆர். மனதில் மட்டுமல்லாமல் அவரது அரசிலும் முக்கியப் பங்கு வகித்து வந்தார் திருநாவுக்கரசர்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளராகவும் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான அவர், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா, அதிமுகவின் தலைவியாக உருவெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திருநாவுக்கரசர்.
இவரும், சாத்தூர் ராமச்சந்திரனுரம், ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆம்னி பஸ்களில் ஊர் ஊராக சென்ற காட்சி தமிழக மக்கள் மனதிலிருந்து இன்னும் கூட மறைந்திருக்காது.
சில காலம் கழித்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.பின்னர் அதைக் கலைத்து விட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். பிறகு மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.
கடைசியாக அவர் பாஜகவில் இணைந்தார். அங்கு ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய செயலாளராக தற்போது இருக்கிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்று இணை அமைச்சராக செயல்பட்டவர் திருநாவுக்கரசர்.
இந்த நிலையில் பாஜகவுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளார் திருநாவுக்கரசர். அங்கிருந்து தற்போது காங்கிரஸுக்கு வரவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் என பலரையும் அவர் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் அவர் 20-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு அவர் மீண்டும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தலைவர்களை சந்தித்து காங்கிரசில் இணைவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார்.
இதையடுத்து தீபாவளிக்குப் பின்னர் அல்லது சில நாட்களுக்கு முன்பாக மதுரை அல்லது திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் காங்கிரஸில் சேருகிறார் திருநாவுக்கரசர். இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு அனேகமாக ராகுல் காந்தி வரக் கூடும் எனத் தெரிகிறது.
அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் தனிக் கட்சி, மீண்டும் அதிமுக, பாஜக என சென்று கொண்டிருந்த திருநாவுக்கரசர் தற்போது இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸுக்குச் செல்கிறார். இருப்பினும் அவர் திமுகவில் இதுவரை சேர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications