உணர்ச்சியற்ற மத்திய அரசு-இல.கணேசன் தாககு
சென்னை: தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பற்றி மத்திய அரசு கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அது உணர்ச்சியற்றதாகிவிட்டது என தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்தவொரு நாடும் தன் நாட்டு குடிமகன் அன்னிய நாட்டினரால் துன்புறுத்தப்பட்டால் ஆர்த்தெழுந்து நீதி கேட்கும். இந்திய குடிமக்களாகிய நமது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகின்றனர். ஆனால், மத்திய அரசு அது குறித்து சிறிதும் கவலைப்படாமல் உணர்ச்சியற்று இருக்கிறது.
எல்லையை காப்பது என்றால் கடலையும், கடற்கரையும் காப்பது தான். கடலோர பகுதியில் வசிக்கும் குடிமக்களை காப்பது தங்கள் கடமையில்லை என இந்திய கடற்படை கருதுகிறதா?
இந்திய மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதை கண்டித்தும், இது குறித்து மவுனம் சாதிக்கும் செயலற்ற மத்திய அரசை கண்டித்தும், கடலில் எல்லைகளை வரையறுத்து காட்ட ஒளியை பிரதிபலிக்கும் மிதவைகளை அமைக்க கோரியும், கச்சத்தீவு கடல்பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையை மீட்டுத்தர வேண்டியும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.
நாளை ராமேஸ்வரத்தில் போராட்டம்...
இது நாளை காலை 10 மணிக்கு ராமேஸ்வரத்தில் நடத்துகிறது. பொதுமக்களும், மீனவ சமுதாயமும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டுகிறேன் என அறிக்கையில் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications