சிதம்பரம் கோவில்- தீட்சிதர்கள் பேனர் அகற்றம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் வைத்திருந்த பேனர்களை போலீஸார் அகற்றினர்.
சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோயிலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் கோவில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அர்ச்சனை சீட்டு ரூ. 5 நெய்தீப சீட்டு ரூ. 2, சிற்றம்பல மேடையில் சிறப்பு தரிசனம் செய்ய கட்டணம் ரூ. 50, விழாக்கால சிறப்பு தரிசனம் ரூ. 100 கட்டணம் என்று இந்து அறநிலையத்துறை நிர்ணயித்துள்ளது.
இந்த விவரம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ஆலய பாதுகாப்பு குழு சுவரொட்டிகள், கண்டன போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் அரசின் நடவடிக்கையை கண்டித்து டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர்.
இது பற்றி செயல் அதிகாரி சிவக்குமார், சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதையடு்த்து விரைந்து வந்த போலீஸார் அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர்.
மேலும், தீட்சிதர்கள் ஆலய தரிசன கட்டண விவரங்களை அறிந்து கொள்ள சில பெயர்களை குறிப்பிட்டு அவர்களை அணுகலாம் என ஒரு பேனரில் குறிப்பிட்டிருந்தனர். இதையும் போலீஸார் அகற்றினர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications