யுஆர்எல்களில் //: இணையத்தை கண்டுபிடித்தவர் வருத்தம்!
லண்டன்: இணைய தள முகவரிகளில் இடம் பெறும் // (slash) இல்லாமல், அதை உருவாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டது தவறு என்பதை உணர்கிறேன். இதற்காக இணையத் தளங்களைப் பயன்படுத்துவோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இணையதை கண்டுபிடித்தவரான சர் டிம் பெர்னர்ஸ் லீ.
world wide web எனப்படும் இணையத் தளத்தை உருவாக்கியவர்தான் லீ. இணையத் தள முகவரிகளை அடிக்கும்போது // என இரண்டு ஸ்லாஷ்களைப் போடுவோம். ஆனால் மறதியாக ஒரு ஸ்லாஷ் மட்டும் போட்டால், இணையதளம் ஓபன் ஆகாது. மாறாக சின்டாக்ஸ் எர்ரர் என்று காட்டும். இதனால் இணையதள பயன்பாட்டாளர்கள் டென்ஷன் ஆகின்றனர்.
எதற்காக இந்த இரண்டு ஸ்லாஷை கண்டுபிடித்தார்களோ என்று அலுத்துக் கொள்கிறார்கள். இதை தற்போது லீயும் புரிந்து கொண்டுள்ளார். ஸ்லாஷ் இல்லாமலேயே யுஆர்எல்களை உருவாக்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இணையத் தளம் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இணையத் தளம் குறித்த ஆய்வில் இருந்தபோது, இந்த ஸ்லாஷ், இணையத் தள பயன்பாட்டாளர்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
ஒரு ஸ்லாஷ் போடாமல் விட்டால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இணையத் தள பயன்பாட்டாளர்களுக்கு பெரும் அவுசகரியம் ஏற்படுகிறது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஸ்லாஷ் இல்லாமலேயே யுஆர்எல்களை நான் உருவாக்கியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் விட்டதற்காக வருத்தப்படுகிறேன், அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.
லீ, தற்போது, வேர்ல்ட் வைட் வெப் கன்சார்சிடியத்தின் இயக்குநராக இருக்கிறார். இணையத் தளங்களின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications