நானும் தந்தையை இழந்தவன்-ராகுல் உருக்கம்
ராஞ்சி: உங்களைப் போலவே நானும் எனது தந்தையை இழந்தவன்தா என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினரிடம் கூறி ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்துவாரின் மனைவி மற்றும் குழந்தைளை சந்தித்து ஆறுதலாகப் பேசினார். இதனால் இந்துவாரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்துவாரின் மனைவி சுனிதா கூறுகையில், ராகுல் காந்தியின் வருகையால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனது குழந்தைகளிடம் ராகுல் காந்தி பேசுகையில், தானும் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவன்தான் என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
நானும் எனது தந்தையை ஒரு குண்டுவெடிப்பில் பறிகொடுத்தவன்தான் என்று கூறினார் ராகுல் என்றார்.
இந்துவாரின் மகன்கள் அபிஷேக், மனீஷ் ஆகியோர் கூறுகையில், நாங்கள் எப்படிப் படிக்கிறோம், எங்களது பள்ளி, ஆசிரியர்கள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். தனது தந்தைக்கும், எங்களது தந்தைக்கும் நடந்தது குறித்து விளக்கினார் என்றனர்.
மனீஷ், ராகுலிடம் பேசுகையில், நான் வளர்ந்து பெரிய போலீஸ் அதிகாரி ஆவேன். அப்போது எனது தந்தையைக் கொன்ற நக்சலைட்டுகளை ஒழிக்க போராடுவேன் என்று கூறினான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications