பெங்களூரி்ல் இந்திய-ரஷ்ய-சீன வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
பெங்களூர்: இந்திய, ரஷ்ய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜெய்சி ஆகியோர் முத்தரப்பு நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
சமீபத்திய எல்லை பிரச்சனையால் இந்திய-சீன உறவு மோசமாக உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இரு நாடுகளுக்கும் மிக நெருக்கமான நட்பு நாடான ரஷ்யா இந்த விவகாரம் பெரிதாகாமல் தடுக்க மறைமுகமாக முயன்று வருவதாகத் தெரிகிறது.
அருணாசல்-தலாய் லாமாவுக்கு அனுமதி:
இந் நிலையில் திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா, அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை அருணாசல் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்ய, சீனாவின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தனக்கு அனுமதி கடிதம் அனுப்பி இருப்பதாக மாநிலத்தின் வரவேற்பு குழுத் தலைவர் டி.ஜி.ரிங்போசே நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா-யுஎஸ் கூட்டு ராணுவ பயிற்சி:
இதற்கிடையே கடந்த இரு தினங்களாக இந்திய-அமெரிக்க ராணுவத்தினர் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் இரு நாடுகளின் போர் விமானங்கள், டாங்கிகள், விமானியில்லா உளவு விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பாபினா பகுதியில் இந்த பயிற்சி நடக்கிறது. 18 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு 'யுத் அபியாஸ்' (போருக்கு தயாராகுங்கள்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆக்ராவில் இரு நாட்டு விமானப் படைகளும் கூட்டுப் பயி்ற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications