அமெரிக்க டாலருக்கு ஈடு இணை கிடையாது-மன்மோகன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க டாலருக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. அதற்கு மாற்றும் கிடையாது. உலகளாவிய வர்த்தகத்திலிருந்து டாலரை நீக்குவது இயலாத காரியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்குத் தெரிந்து இப்போதைக்கு அமெரிக்க டாலருக்கு ஈடு, மாற்று எதுவும் கிடையாது. உலக வர்த்தகத்திலிருந்து டாலரை நீக்கிப் பார்ப்பது இயலாத காரியம்.

அமெரிக்க டாலருக்கு தற்போது தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதை வைத்து டாலருக்கு முடிவு கட்டி விட முடியாது.

சீனாவே கூட தங்களிடம் இருப்பு உள்ள 2.5 டிரில்லியன் டாலர் பணத்தை இன்னும் மாற்றாமல்தான் வைத்துள்ளனர். காரணம், அமெரிக்க டாலர் மீதான அவர்களது நம்பிக்கை.

இது அமெரிக்க டாலர் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையின் அளவாகும். பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இது தற்காலிகமானது, விரைவில் சரியாகும் என்றார் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+