For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதங்களை கைப்பற்ற அல்-கொய்தா திட்டம்: ஒபாமா

By Staff
Google Oneindia Tamil News

Obama
டெல்லி: ஆப்​கா​னிஸ்​தா​னில் தலி​பான்​களுக்கு எதிரான போரில் இந்திய உதவியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கோரியதாகத் தெரிகிறது.

பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கு​டன் நேற்றிரவு தொலைபேசியில் பேசிய அவர் ஆப்​கா​னிஸ்​தா​ன் பிரச்சனை மற்றும் புவி வெப்​பம் அடை​தல்,​ அதைத் தடுக்க வேண்​டிய நட​வ​டிக்​கை​கள் குறித்து கோபன்​ஹே​கன்
நக​ரில் நடக்கும் சர்​வ​தேச மாநாட்டில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

இம் மாதம் 7ம் தேதி கோபன்​ஹே​கன் நகரில் தொடங்கும் மாநாட்டில் பங்​கேற்​கு​மாறு பிர​த​மர் மன்​மோ​கன் சிங்கை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
என்று தோன்​று​கி​றது.

கோபன்​ஹே​கன் மாநாட்​டில் இந்​தியா ஆக்​கப்​பூர்​வ​மான பங்​க​ளிப்பை வழங்​கும்,​ உலக நாடு​கள் ஏற்​கும்​ப​டி​யான முடி​வு​கள் அந்த மாநாட்​டில் எடுக்​கப்​ப​டும் என்ற நம்​பிக்கை தனக்கு இருக்​கி​றது என்று மன்​மோ​கன் சிங்,​ ஒபா​மா​வி​டம் கூறி​னார் என்று பிர​த​மர் அலு​வ​லக
வட்​டா​ரங்​கள் கூறுகின்றன.

சர்​வ​தேச அளவிலான இந்தப் பிரச்சனையில் தன்​னிச்​சை​யா​கவே அமெ​ரிக்கா செயல்பட வேண்டாம் என்று ஒபாமா கருதுவதாகத் தெரிகிறது. இதனால் தான் பல நாட்டுத் தலைவர்களுடனும் விவாசிக்க ஆரம்பித்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே பிரதமருடனும் பேசியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இரு தலைவர்களும் ஆப்கானி்ஸ்தான், பாகிஸ்தான், தலிபான் விவகாரம் குறித்தே நீண்ட நேரம் பேசியதாகத் தெரிகிறது.

தலி​பான்​களை ஒடுக்​கு​ம் விஷயத்தில் அமெரிக்கா தலைமையிலான நேடோ வீரர்களைக் கொண்ட படை எவ்​வ​ளவு காலம்​தான் சண்​டை​ போடுவது என்று தெரியாமல் விழித்து வருகி​றது.

உள்​நாட்​டில் அமெ​ரிக்​கர்​கள் எதிர்க்​கி​றார்​கள்
என்​ப​தற்​கா​கவோ,​ செலவு அதி​க​மா​கி​றது என்​ப​தற்​கா​கவோ ஆப்​கா​னிஸ்​தா​னில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுவிட வேண்டாம் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆப்​கா​னிஸ்​தா​னில் நடை​பெ​றும் வன்​மு​றைகளால் அரசு குலைந்து குழப்​பம் நேரிட்​டால் அதன் விளை​வை உலகமே எதிர்கொள்ள வேண்டி வரும் என ஒபாமாவிடம் பிரதமர் கூறியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகளை அனுப்ப முடியுமா என்றும் ஒபாமா கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை இரு நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் 30,000 வீரர்கள்:

இந் நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30,000 வீரர்கள் அனுப்பப்படுவர் என்று பராக் ஒபாமா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் அடுத்த 18 மாதங்களில் படைகளை வாபஸ் பெறும் பணியும் ஆரம்பித்துவிடும் என்று கூறியுள்ளார்.

எட்டு ஆண்டு கால ஆப்கானிஸ்தான் போரின் அடுத்த கட்டம் குறித்த புதிய உத்திகளை வகுப்பது தொடர்பாக வெஸ்ட் பாயின்ட் என்ற இடத்தில் ஒபாமா பேசுகையில்,

ஆப்கானிஸ்தான் எல்லைப் புறத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிரவாத புற்று ஆழ ஊடுறுவி புரையோடிப் போய்க் கிடக்கிறது. இதை வேரோடு அழிக்க வேண்டும். இதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவும்.

தீவிரவாத குழுக்களை அழிக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்பு பலத்தை அதிகரிக்க அமெரிக்கா உதவும். இனியும் பாகிஸ்தானும், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளும், ஆப்கானிஸ்தானும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்வை அனுமதிக்க முடியாது. அவர்களின் நோக்கம் என்ன என்பது உலக மக்களுக்கு தற்போது தெளிவாகி விட்டது.

அல் கொய்தாவும், தலிபான்களும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள். அமெரிக்காவுக்கும், அதன் தோழமை நாடுகளுக்கும் எதிராக இதைப் பயன்படுத்த துடிக்கிறார்கள்.

ஆனால் இதை அமெரிக்கா அனுமதிக்காது. அணு ஆயுதங்கள் அவர்கள் கைக்குப் போவதைத் தடுப்போம்.

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாதிகளை குலைக்கவும், அவர்களது கட்டமைப்புகளை சீர்குலைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. அதை லட்சியமாக கொண்டுள்ளது.

இவர்களால் அமெரிக்காவுக்கும், அதன் தோழமை நாடுகளுக்கும் ஆபத்து வராமல் தடுக்க அமெரிக்கா உறுதியுடன் உள்ளது.

எல்லைப் பகுதியிலிருந்து தீவிரவாதத்தை விரட்ட பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.

ஸ்வாட் பிராந்தியம் மற்றும் தெற்கு வசிரிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போது ஒரே எதிரிதான். அந்த எதிரியை வேரறுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் அமெரிக்கா உறுதியான ஆதரவை தொடர்ந்து அளிக்கும். இதை பாகிஸ்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்தக் கூடுதல் படைகளை அனுப்புவதால் அமெரிக்காவுக்கு முதல் ஆண்டில் மட்டும் 30 பில்லியன் டாலர் கூடுதல் செலவாகும்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் 68,000 அமெரிக்கப் படை வீரர்கள் உள்ள நிலையில் கூடுதலாக 30,000 வீரர்கள் செல்கின்றனர்.

அதே போல நேடா அமைப்பில் உள்ள நாடுகள் 10,000 வீரர்களை அனுப்ப வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார். ஆனால், உடனடியாக 500 கூடுதல் வீரர்களை மட்டுமே அனுப்ப பிரிட்டன் ஒப்புக் கொண்டுள்ளது.

இந் நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை ஒபாமா கையாளும் முறைது சரியல்ல என்று 55 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X