நோயாளியிடம் செக்ஸ் செல்மிஷம்- பிசியோதெரபிஸ்ட் கைது
கோவை, சரவணம்பட்டி, ஜனதா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சகோதரி மாலதி (26) சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார்.
இதனால் அவரது காலில் கடும் வீக்கம் ஏற்பட்டதால், திருச்சி ரோட்டில் உள்ள ஒரு எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மாலதியை டாக்டர்கள் பரிசோதனை செய்து சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, பிசியோதெரபி செய்து கொள்ள பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து, அவருக்கு சூலூரைச் சேர்ந்த, பிசியோதெரபிஸ்ட் பூபதி (32) என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த நிலையில், மாலதி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த பூபதி, படுக்கையில் இருந்த மாலதிக்கு பயிற்சி அளிப்பது போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இனால் அதிர்ச்சியடைந்த மாலதி கடும் கூச்சல் போட்டார். இதனையடுத்து, வெளியில் இருந்த சகோதரர் சுரேஷ் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூபதியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் பிசியோதெரபிஸ்ட் பூபதிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது, பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்தல், துன்புறுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications